விரைவில் ஊராட்சியை பற்றிய முழு தகவல்கள்.. .
விரைவில் ஊராட்சியை பற்றிய முழு தகவல்கள்.. .
விரைவில் ஊராட்சியை பற்றிய முழு தகவல்கள்.. .

Friday, 5 October 2012

ஊராட்சியின் முழு விவரம்..


                              

                              

                   சென்னங்காரணி

                        
                       எல்லாபுரம் ஒன்றியம்
                     
                       ஊத்துக்கோட்டை வட்டம்
                         
                          சூளைமேனி -அஞ்சல்
                    
                     திருவள்ளூர் மாவட்டம
                  
                    கும்மிடிபூண்டி தொகுதி

மின்னஞ்சல்-chennankarani@gmail.com

இது வரை எங்கள் ஊராட்சியை ஆட்சி செய்த 
சட்டமன்ற உறுப்பினர்கள்

சென்னையிலிருந்து புத்துர் செல்லும் SH 51 நெடுஞ்சாலையில் பெரியபாளையத்திலிருந்து 9.கிமீ தொலைவிலும் ஊத்துக்கோட்டையிலிருந்து 9.கிமீ தொலைவில் அமைந்துள்ளது இக்கிராமம். அதவாது கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 53 கிமீ தொலைவில் அமைந்துள்ளது

கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து அண்ணாநகர்,செங்குன்றம்,சனப்பன் சத்திரம் கூட்டுரோடு,கன்னிபுத்துர்,பெரியபாளையம், தண்டலம் வழியாக சென்றால் இவ் அழகிய ஊராட்சியை காணலாம்... 

சென்னங்காரணி கிராமம்

சென்னங்காரணி கிராமம் திருவள்ளுர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டத்திற்க்கு உட்பட்ட எல்லாபுர ஒன்றியத்தில் உள்ள ஓர் அழகிய ஊராட்சி.

சென்னங்காரணி ஊரட்சி இயற்கை சூழலுடன் பசுமை படர்ந்த விவசாய நிலங்களால் ஆனது.

இந்த ஊராட்சியில் அதிகமாக வன்னியர் சமூகத்தை சார்ந்த மக்களே அதிகம்.மலர்கள்,நெல்,அதிகமாக விளைய கூடிய பகுதி.

சென்னங்காரணி 5 குக்கிராமங்களை உள்ளடக்கியது.1.சென்னங்காரணி 2.மேட்டுக்கண்டிகை 3.பள்ளக்கண்டிகை 4.காவனுார் 6.வள்ளுவர் நகர்


உலக வளர்ச்சிக்கு ஏற்ப வளர்ந்து வரும் ஊராட்சியாகும்.கிராமங்களில் உள்ள இளைஞர்கள் மற்ற கிராமங்களிலிருந்து மாறுபட்டு சுற்றுச்சூழல் மீதும் பொதுமக்கள் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதிலும் முன்னுதாரணமாக செயல்பட்டு வருவது இந்த ஊராட்சியின் சிறப்பு.. 

ஊர் பெயர்வரக்காரணம்

சென்னங்காரணி என்ற பெயர் சென்னை+காரணி= என்ற ஊரின் இணைப்பே சென்னங்காரணியாகும்.

ஊராட்சியை ஒட்டியுள்ள ஆரணி ஆற்றங்கரையோரம் முன்காலத்தில் சென்னைபட்டணம் என ஒரு கிராமம் இருந்தாதகவும் அங்கு வாழ்ந்த மக்கள் பல வருடங்களுக்கு பின்பு சில கிலோ மீட்டர் தொலைவிற்க்கு தங்கள் இருப்பிடத்தை மாற்றி குடியேறினார்கள்.அங்கு குடியேறிய பகுதிக்கு காரணி என்ற பெயர் வைத்தாகவும் பின்பு அவ்வுர் சென்னைபட்டணம்+காரணி=என இணைத்து சென்னைகாரணியாக மாறி பின்பு தற்போது அழைக்கபடும் சென்னங்காரணியாக உள்ளது.
என கிராமங்களில் வாழும் மூத்தோர்கள் கூறுகிறார்கள்.

இதற்க்கு சாட்சியாக இப்பொழுதும் சென்னை பட்டணம் இருந்தாற்காண சாட்சியாக கிராமத்தை ஒட்டியுள்ள ஆரணி ஆற்றங்கரையோரம் பழங்காலத்தில் பயன்படுத்த பட்ட பொருட்கள்,சிலைகள் விவசாய நிலங்களை சமபடுத்தும் போது கிடைத்துள்ளது. 

விழாக்கள்

 இந்த ஊராட்சியில் இந்துக்களால் கொண்டாடபடும் அனைத்து விழாக்களும் சிறப்பாக கொண்டாடபடுகிறது.

இவ்வுராட்சியில் 
1.பழமை வாய்ந்த சிவன் கோயில் (ஆரணி ஆறு அருகில்)
2.அருமாத்தம்மன் கோயில் (ஆரணி ஆறு அருகில்)
3.திரெளாபதி அம்மன் கோயில் (சென்னங்காரணி)
4.செல்லியம்மன் கோயில் (காவனுார்)
5.பிள்ளையார் கோயில் (மேட்டுக்கண்டிகை)
6.பெருமாள் கோயில் (பள்ளக்கண்டிகை)
7.பெருமாள் கோயில் (மேட்டுக்கண்டிகை)
8.முனுசாமி கோயில் (பள்ளி அருகில்)
9.திரெளாபதி அம்மன் கோயில் (மேட்டுகண்டிகை,பள்ளக்கண்டிகை ஊர் நடுவில்)
10.பெரியபாளையத்தம்மன் கோயில் (பள்ளக்கண்டிகை)

11. பெருமாள் கோயில் (சென்னங்காரணி)

ஆகிய கோயில்களில் திருவிழாக்கள் வெகு சிறப்பாக கொண்டாட படுகிறது. 


-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இக்கிராமத்திலிருந்து திருப்பதி செல்லும் சாலையில் சென்றால் சிவபெருமான் சயனக் கோலத்தில் காட்சி தரும் இந்தியாவின் ஒரே கோவில் சுருட்டப்பள்ளி உள்ளது

மற்றும் இவ்வுராட்சியிலிருந்து சென்னை செல்லும் சாலையில் சென்றால் சுமார் 10 கி.மீ தொலைவில்   உலக புகழ் பெற்ற பெரியபாளையம் கிராமத்தில் அமைந்துள்ள பவானி அம்மன் கோயில்  உள்ளது..


அடிப்படைத் தகவல்கள்-திருவள்ளூர் மாவட்டம்

தலைநகர்

திருவள்ளூர்
பரப்பு
 3,422 .கி.மீ
மக்கள்தொகை
1631
ஆண்கள்
பெண்கள்
மக்கள் நெருக்கம்
ஆண்-பெண்
எழுத்தறிவு விகிதம்
இந்துக்கள்

கிருத்தவர்கள்
இஸ்லாமியர

புவியியல் அமைவு


அட்சரேகை
 120.15-130.15N
தீர்க்கரேகை
 190.15-800.20E


மாவட்ட இணையதளம்


ஆட்சியர் அலுவலகம்

மின்னஞ்சல்collrtir@tn.nic.in
தொலைபேசி: 144-27661600


எல்லைகள்


கிழக்கில் தொளவேடு ஊராட்சியும்
வடக்கில் இலட்சிவாக்கம் ஊராட்சியும்
தெற்கில் மாளந்துார் ஊராட்சியும்
மேற்கில் பனப்பாக்கம் ஊராட்சியின்எல்லைகளும் அமைந்துள்ளன. 


முக்கிய ஆறுகள்: 

ஆரணி ஆறு, 

நிர்வாகப் பிரிவுகள்

வருவாய்  கிராமங்கள்: - 
சென்னங்காரணி
மேட்டுக்கண்டிகை
பள்ளக்கண்டிகை
காவனுார்
வள்ளுவர் நகர்


No comments:

Post a Comment